என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஓ. பன்னீர்செல்வம்
நீங்கள் தேடியது "ஓ. பன்னீர்செல்வம்"
தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்." என்றார் பேரறிஞர் அண்ணா.
ஆனால் இதற்கு முரணான நிலைதான் தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சனைகளிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
ஒரு பக்கம் அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், மறுபக்கம் அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையிலிருந்து நீக்கும் முயற்சியையும் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் பணியாற்றுவோரை பணிநீக்கம் செய்வதாக மாநகராட்சியினர் தெரிவித்தபோது
அதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு அறநெறியில் போராடியவர்களை காவல் துறையில் புகார் அளித்து கைது செய்வோம் என மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டியதாகவும்- பத்திரிகைகளில் செய்தி வந்தன.
திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அம்மா உணவகங்களிலும் இதே நிலைமைதான் நீடிப்பதாக செய்திகள் வருகின்றன. சில இடங்களில் நிதிச் சுமையை காட்டி பணியாளர்களை விலகச் சொல்கிறார்கள் என்ற தகவலும் வருகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் தற்போது அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கம்பம் நகர தி.மு.க. செயலாளர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பேசிய ஓர் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், தி.மு.க. நகரச் செயலாளர் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்களிடம், தாங்கள்தான் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டீர்களே, புதிதாக மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும்,
தன்னுடைய சொந்த ஓட்டலில் வேலை ஏற்படுத்தித் தருவதாகவும், கட்சிப் பணி புரிந்தவர்களுக்கு வேலை தர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும், கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் பத்து ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததால் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு அந்தப் பெண்கள் தாங்கள் ஏழு ஆண்டுகளாக இங்குதான் பணிபுரிந்து வருகிறோம் என்றும், இதை நம்பித்தான் தங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது என்றும், தங்களில் பெரும்பாலானோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் என்றும் கூறியுள்ளனர். ஆனால் தி.மு.க.வின் நகரச் செயலாளரோ அவர்களை பணியிலிருந்து எடுப்பதில் உறுதியாக உள்ளதாக அந்த ஆடியோச் செய்தியிலிருந்து தெரிய வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செயலில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. தி.மு.க.வினரின் இதுபோன்றச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருக்கும்போது, அனைத்து உணவகங்களும் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தங்களது உயிரை - துச்சமென மதித்து, நேரம், காலம் பார்க்காமல் அல்லும் பகலும் அயராது உழைத்து ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்றும் மகத்தான பணியைச் செய்தவர்கள். அவர்களை அந்தப் பணியிலிருந்து எடுத்துவிட்டு அங்கு தி.மு.க.விற்கு பணியாற்றியவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நியாயமற்ற செயல். இயற்கை நியதிக்கு முரணானது.
"எங்களுக்கு வாக்களித்தவர்கள், இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய வகையிலே எனது பணி இருக்கும்" என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்கள் எல்லாம் யாருக்கு வாக்களித்தார்கள் என்று தெரியாத நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பணியிலிருந்து நீக்க முயற்சிப்பது, பணியிலிருந்து விலகுமாறு மிரட்டுவது முதலமைச்சரின் கூற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தீர விசாரித்து, அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க.வின் மிரட்டப்பட்டு தி.மு.க.-வில் சேர்க்கப்பட்டதற்கு ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கண்டன அறிக்கை வருமாறு:-
கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22-10-2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் 4 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் கடந்த 21-10-2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார்.
மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் நாளான 22-10-2021 அன்று 4 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திமுக வெற்றிபெற முடியாது என்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்குப் பயந்து தேர்தலை தள்ளி வைத்துள்ளார்.
தேர்தல் அதிகாரி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டார். கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்களும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் கேட்டபோது, காவல்துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
அதன் பிறகு, தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும், தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்து கொண்ட மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை வைத்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு 2-வது வார்டு உறுப்பி னர் ஆ. அலமேலு கணவர் மீது, குட்கா வைத்திருந்ததாக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல் துறையினர் இரண்டு பொய் வழக்குகளை போட்டுள்ள னர்.
அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படவே, தங்கள் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி அவர்கள் கடந்த 18-11-2021 அன்று திமுகவில் சேர்ந்து விட்டனர்.
அதேபோல், கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு 10-வது வார்டு உறுப்பினர் நல்லமுத்து வடிவேலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று, நிறுவனத்தை சீல் வைப்பதாக மிரட்டியும்; ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில்வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து 23.11.2021 அன்று நல்லமுத்து வடிவேல் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.
இதுபோல், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து, கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்டத் தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கழகத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் தி.மு.க.வில் சேருமாறு, மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் தி.மு.க.வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொது வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவர்கள் தொழில் செய்ய முடியாத அளவிற்கு தி.மு.க.வினர், அதிகாரிகளை வைத்து மிரட்டியும் வருகின்றனர். நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தி.மு.க.விற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.
மேலும், அரசியல் ரீதியாக அ.தி.மு.க.-வை சந்திக்க முடியாத தி.மு.க.வை வன்மையாகக் கண்டிக்கிறோம்
இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்,
அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பது வரு மாறு:-
சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, முதல் அமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர்க் பலகை வைத்ததோடு அந்த பெயர்ப் பலகையில் தற்போதைய முதல் அமைச்சர் மற்றும் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளி வந்துள்ளது.
இது தொடர்பாக புகார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெயர்ப் பலகையை மாற்றவோ, பெயர்ப் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அரசு ஆணை இல்லாமல், அந்தத்துறை தொடர்புடைய அதிகாரிகளின் இசைவு இல்லாமல் எந்த அடிப்படையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை விளக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.
அரசாங்க அலுவலகத்தில் உள்ள பெயர் பலகைகளை எந்த ஆணையும் இல்லாமல், அதிகாரிகளின் இசைவு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்றால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதுதான் பொருள்.
மேற்படி இடத்தில், ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பலகை முதல் அமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்தப் பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதையெல்லாம் ஆராய்ந்து சட்டத்திற்கு புறம்பாக பெயர் பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அம்மாவின் திருவுருவப் படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை மீண்டும் அங்கு பொருத்தப்பட வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே முதல் அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் ஜெயலலிதா திருவுருவப்படத்துடன் கூடிய ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை அங்கே பொருத்தப்படவும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சாத்தியமில்லை என நிதியமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு பத்து ரூபாயும் குறைத்துள்ள நிலையில், அதனை பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியினை கணிசமாக குறைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை தமிழ்நாடு அரசு குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 2014-ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்துவிடும் என்றும் நிதியமைச்சர் கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தத் தருணத்தில், கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, 06-06-2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் தமிழ்நாடு அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்திற்குட்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அடித்தட்டு மக்களையும், குறிப்பாக, தாய்மார்களையும் பெரிதும் பாதிக்கக்கூடிய வகையிலே இருக்கிற காரணத்தாலே இதுபற்றி உடனடியாக அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார்.
கேரளாவை விட தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருந்தத் தருணத்தில், அந்த மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் தற்போதைய முதலமைச்சர். ஆனால், இன்று மத்திய அரசு குறைத்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் தமிழ்நாட்டை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் அதைச் செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று நிதி அமைச்சர் அறிவித்திருப்பது வேதனைக்குரியது.
நிதி அமைச்சர் தனது அறிக்கையில் 01-08-2014, 02-11-2021 மற்றும் 04-11-2021 ஆகிய தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரிகள், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மத்திய அரசின் வரி அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என்று கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் வரி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்கிற நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் வரியைக் குறைத்திருக்கும்போது தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது என்றே தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசின் இந்த வரி விதிப்பு என்பது தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு தானே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதில் ஏதாவது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததா? இல்லையே!
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோலுக்கு மட்டும்தானே லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினால், 2014-ம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நிதி அமைச்சர். அப்பொழுதும் மாநில அரசின் வரி விகிதத்தை குறைப்பேன் என்று சொல்லாமல், மத்திய அரசின் வரிக் குறைப்பால் மாநில அரசின் வரிவிதிப்புதானாக குறைந்துவிடும் என்று கூறுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். அதேசமயத்தில், வாக்குறுதியே அளிக்காத பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கணிசமாக குறைத்துள்ளன.
தி.மு.க.வின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தத் தருணத்தில், "சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். அவன் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்கிற வித்தியாசம் அவனுக்குத் தெரியும்" என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து, ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் என்று தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டி உள்ளார். #OPanneerSelvam #ADMK #DMK
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து, திருவெறும்பூரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்று, எம்.பி.யாக பதவியேற்றவுடன், திருச்சி மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினார். ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த உருப்படியான திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து, ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள்.
கடந்த 1972-ம் ஆண்டு கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே 4 அணைகள் கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நதி நீர் குறைந்து விட்டது. இப்பிரச்சினையை தீர்க்க 17 ஆண்டு காலமாக காவிரி நடுவர் மன்றம் விசாரித்தது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறி கலர், கலராக உடைகளை அணிந்து, கரும்பு தோட்டத்தில் சிமெண்டு சாலை போட்டு நடந்து சென்றார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. தற்போது அவர்கள் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் டீக்கடையே நடத்தியவர்கள்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தமிழ்நாட்டையே கொளுத்திவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர்கள்தான் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தியவர்கள். வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட கட்சி தி.மு.க.தான். அவர் தமிழக முதல்-அமைச்சர் ஆனால் தமிழகத்தின் நிலைமையை எண்ணிப்பார்க்க முடியுமா?. இந்த தேர்தலுடன் அ.தி.மு.க.வின் கதை முடிந்து விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த தேர்தலின் முடிவுக்கு பின்னர் யார் கதை முடியப்போகிறது என்பது தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார். #OPanneerSelvam #ADMK #DMK

அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் 2011-ம் ஆண்டு அவர்களது ஆட்சி முடியும் வரை நடக்கவில்லை. அதன்பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறி கலர், கலராக உடைகளை அணிந்து, கரும்பு தோட்டத்தில் சிமெண்டு சாலை போட்டு நடந்து சென்றார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. தற்போது அவர்கள் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் டீக்கடையே நடத்தியவர்கள்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தமிழ்நாட்டையே கொளுத்திவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர்கள்தான் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தியவர்கள். வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட கட்சி தி.மு.க.தான். அவர் தமிழக முதல்-அமைச்சர் ஆனால் தமிழகத்தின் நிலைமையை எண்ணிப்பார்க்க முடியுமா?. இந்த தேர்தலுடன் அ.தி.மு.க.வின் கதை முடிந்து விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த தேர்தலின் முடிவுக்கு பின்னர் யார் கதை முடியப்போகிறது என்பது தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார். #OPanneerSelvam #ADMK #DMK
மதவெறி என்ற விஷ விதையை சட்டசபையில் விதைக்க வேண்டாம் என்று தி.மு.க.வுக்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். #OPanneerselvam #TNAssembly
சென்னை:
தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
மு.க.ஸ்டாலின்:- இந்த மண்ணில் மதவெறி சக்திகளுக்கு நிச்சயமாக இடமில்லை. தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, பெரியார், அண்ணா பிறந்த மண்ணில் நாம் மத சார்பற்ற சக்திகளை மட்டுமே ஊக்கப்படுத்தி இருக்கிறோம்.
ஆனால், சமீப காலங்களில் மதவெறி பிடித்த சக்திகளுக்கு இடமளிக்க கூடிய வகையில் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- மதவெறிக்கு இந்த அரசு ஆதரவு என்று கூறி விஷவிதையை விதைக்காதீர்கள். அது நாட்டுக்குக் கேடு. அதிக ஆண்டுகள் தி.மு.க.தான் அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆட்சி இது. எப்போது நாங்கள் மதவெறி சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறோம்.
இதுபோன்ற போர்வைகளை எல்லாம் எங்கள் மீது போர்த்த வேண்டாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இதுபோன்ற போர்வைகளை எல்லாம் கிழித்து சுக்கு நூறாக்கி இருக்கிறார்கள்.
துரைமுருகன்:- நன்றாக முடிவு எடுத்தீங்க. கரசேவைக்கு போய் கல்லு எடுத்து கொடுத்தீங்க.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்றால் யாரிடம் வேண்டுமாலும் போய் சேர்ந்துகொள்கிறீர்கள். அப்போது மதவாதம் தெரியவில்லை. 5 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். உங்கள் மத்திய மந்திரி ஓராண்டு காலம் நினைவில்லாமல் இருந்தாலும், அவரை மந்திரியாக வைத்திருந்தனர். அன்றைக்கு மதவாதம் தெரியவில்லையா. இன்றைக்கு மதவாதம் தெரியுதா? எங்களை பொருத்தவரை ஒரே நிலையில் இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்:- சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தையும் போற்றி வளர்த்த மண் இந்த தமிழ்நாட்டு மண். ஆனால், திராவிட இயக்கம் கட்டிக் காத்த மதசார்பற்ற தன்மை மத நல்லிணக்கம் சென்றுவிட்டால் அது நிச்சயம் திரும்ப வராது அது இந்த மண்ணிற்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் நாம் திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை, தன்மானத்தை இழந்துவிடக் கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது. #OPanneerselvam #TNAssembly

மத்திய அரசில் நாங்கள் அங்கம் வைத்தோம். ஒரே ஆண்டில் கொள்கை முடிவு எடுத்து ஆதரவை விலக்கினோம். ஆனால் நீங்கள்தான் 5 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வைத்தீர்கள்.
துரைமுருகன்:- நன்றாக முடிவு எடுத்தீங்க. கரசேவைக்கு போய் கல்லு எடுத்து கொடுத்தீங்க.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்றால் யாரிடம் வேண்டுமாலும் போய் சேர்ந்துகொள்கிறீர்கள். அப்போது மதவாதம் தெரியவில்லை. 5 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். உங்கள் மத்திய மந்திரி ஓராண்டு காலம் நினைவில்லாமல் இருந்தாலும், அவரை மந்திரியாக வைத்திருந்தனர். அன்றைக்கு மதவாதம் தெரியவில்லையா. இன்றைக்கு மதவாதம் தெரியுதா? எங்களை பொருத்தவரை ஒரே நிலையில் இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்:- சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தையும் போற்றி வளர்த்த மண் இந்த தமிழ்நாட்டு மண். ஆனால், திராவிட இயக்கம் கட்டிக் காத்த மதசார்பற்ற தன்மை மத நல்லிணக்கம் சென்றுவிட்டால் அது நிச்சயம் திரும்ப வராது அது இந்த மண்ணிற்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் நாம் திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை, தன்மானத்தை இழந்துவிடக் கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது. #OPanneerselvam #TNAssembly
×

X